Logo of Tirunelveli Today

திருநெல்வேலி செய்திகள்

திருநெல்வேலி மாநகரம், மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களின் செய்திகள் இங்கு உங்களுக்காக!

இன்றைய செய்திகள்

மாநகர்
நீதிமன்ற வளாகத்தில் உதவி மையம் திறப்பு விழா
செய்திக்குறிப்புகள்: நெல்லை மாவட்டம் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை அன்று இரண்டு உதவி மையங்கள் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு இந்த உதவி மையங்களை திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டம் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை உதவி மைய திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மையங்களை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு அவர்கள் திறந்து வைத்தார். நீதித்துறையில் இதுவரை நடந்துவந்த முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு உதவும் வகையில் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த […]
மேலும் படிக்க
அடிப்படை வசதிகள் செய்யக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
செய்திக்குறிப்புகள்: நெல்லை மாவட்டம் திருநெல்வேலி மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி மக்கள் மனு அளித்தனர். செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்என்று மேயர் பி எம் சரவணன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரவேண்டும் எனக் கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேயர் பி. எம் சரவணனிடம் மக்கள் மனு அளித்தனர். மக்கள் […]
மேலும் படிக்க
பருப்பு வகைகளை பதுக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
செய்திக்குறிப்புகள்: நெல்லை மாவட்டம் இன்றியமையா சட்டம் 1955 ன் கீழ் வர்த்தகர்கள் தங்களுடைய பருப்பு, இருப்பு விவரங்கள் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. சட்டத்தை மீறி பருப்புகளை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பருப்பு வகைகளை பதுக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்துஆட்சியர் தம்முடைய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; மத்திய […]
மேலும் படிக்க
மாவட்டம்
மார்ச் 9ஆம் தேதி வியாழக்கிழமை அன்று திருநெல்வேலி தென்காசி ரயில்வே கோட்டத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கடந்த 2012-ம் ஆண்டு திருநெல்வேலி-தென்காசி இடையேயான ரயில் போக்குவரத்து வழித்தடம் 64 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அகலப்பாதையாக தரம் உயர்த்தப்பட்டாலும், 70 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்கான இருப்பு பாதைகள் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து முடிந்தது. மார்ச் 9 ஆம் தேதி திருநெல்வேலி தென்காசி ரயில்வே வழித்தடத்தில் 121 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பிலிருந்து காலை 9.20 மணிக்கு ஆய்வு […]
மேலும் படிக்க
நெல்லை திருமுருகன் திருச்சபை திருமண மண்டபத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம்
செய்திக்குறிப்புகள்: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் செப்டம்பர் 21-ஆம் தேதி திருமுருகன் திருச்சபை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. காலையில் நல அலுவலகர்கள் மக்களிடம் கோரிக்கை மனு பெறுவது, பிற்பகலில் கிராமங்களில் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் அரியநாயகி புரத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம், திருமுருகன் திருச்சபை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. காலையில் கோரிக்கை மனுக்களும் பிற்பகலில் கிராமங்களின் அடிப்படை வசதிகள் […]
மேலும் படிக்க
திசையன்விளையில் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்
செய்திக்குறிப்புகள்: நெல்லை திசையன்விளையில் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு அவர்கள் துவங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ரூபாய் 19 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள ஆக்சிஜன் பைப்லைன் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் ஸ்மார்ட் வகுப்பறைகள் பள்ளிக்கூடங்களில் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார் . உலக ரட்சகர் மேல்நிலைப்பள்ளி, திசையன்விளை ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி […]
மேலும் படிக்க
ஆன்மிகம்
ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலில் வருஷாபிஷேகம் விழா
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருள்மிகு ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலில் வருஷாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது .நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி அருள்மிகு ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் புகழ் பெற்ற ஸ்தலமாக விளங்குகின்றது. விசேஷ நாட்களில் இந்த திருத்தலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்து ஸ்ரீ வெங்கடாஜலபதியை தரிசனம் காண்பது, திருவிழாவில் தீபாராதனை, திருவீதி உலா என அனைத்தையும் கண்டு களிப்பர். இந்த திருக்கோவிலில்நடைபெற்ற வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மகா சங்கல்பம், […]
மேலும் படிக்க
துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து செல்வம் கடாட்சம் பெறுவதற்கு வராகி அம்மன் வழிபாடு
பூலோகத்தை காப்பதற்கு அவதாரமெடுத்த வராகமூர்த்தி பன்றி உருவத்தில் பக்தர்களுக்கு காட்சி அருள்கின்றார்.அவருக்கு உதவி செய்வதற்காக வராகியம்மன் எழுந்தருளினார் என்பது வரலாறு . ஆபத்து எங்கு இருக்கின்றதோ அங்கெல்லாம் வராகி அம்மன் வந்து காப்பாற்றுவாள் என்பது ஐதீகம். நமக்குத் துன்பம் நேரும்போது வராகி அம்மனை மனதார வழிபட்டால் வந்த துன்பமும் பனி போல் நீங்கி விடும், ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றுபவளும் அவளே .. சகல சௌபாக்கியம் வரங்கள் அனைத்தும் கொடுப்பவளும்அவளே ..நமக்கு சக்தியை கொடுத்து வாழ்க்கையில் நலம் கொடுப்பவளும்அவளே. […]
மேலும் படிக்க
வைத்தீஸ்வரன் கோவில் திருத்தலத்தின் சிறப்பு
வைத்தீஸ்வரன் கோவில் உருவான வரலாறு; உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் இறைவனை மறந்து இறைவழிபாட்டை மறந்து பாவம் எது ! புண்ணியம் எது !என்று பகுத்தறிவிலாது தவறுகள் செய்கின்ற போது பலவிதமான தீய செயல்களும் அதர்மங்களும் அதிகமாக ஏற்படுகின்றன.. அதர்மங்கள் அதிகமாக அதிகமாக அழிவுகளும் அதிகமாக ஏற்படுகின்றது. நோய் நொடிகளில் மக்கள் அதிகமாக அவதிபடும் நிலைமையும் ஏற்படுகின்றது இந்த அழிவுகள் மட்டுமல்லாது உலகத்தில் இயற்கை பேரழிவுகளும் அதிகமாகி..உலகமே இருள் சூழும் மயமாகி விடுகின்றது . இதனைத்தான் உலகத்தின் […]
மேலும் படிக்க

தற்போதைய பதிவுகள்

திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், தென்காசி மாவட்டம், குமரி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ஆகிய இடங்களில் நடைபெறக்கூடிய முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் சுடச்சுட உங்களுக்காக!
தூத்துக்குடி செய்திகள்
கலைஞர்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பம் செய்யலாம்!
செய்திக்குறிப்புகள்: தமிழக அரசின் கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்ட கலைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வில்லிசை ஆகிய கலைகளில் சிறந்து […]
மேலும் படிக்க
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா.
செய்திக்குறிப்புகள்: 190 வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தினம் விழா. திருச்செந்தூரில் குவிந்த அய்யாவழி பக்தர்கள். தூத்துக்குடி மாவட்டம்., திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் நேற்று 190-வது ஆண்டு அவதார தின விழா நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 5.00மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் காலை 7.00 மணியளவில் சூரிய உதயத்தில் கடலில் பதமிட்டு, அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் வைபவமும் நடைபெற்றது. பின்னர் மதியம் […]
மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 புதிய ஆம்புலன்ஸ்கள்!
செய்திக்குறிப்புகள்: தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள். மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் அரசு மருத்துவமனை, நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு 3 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை மக்கள் பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செந்தில்ராஜ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மக்கள் […]
மேலும் படிக்க
மேலும் படிக்க
தென்காசி செய்திகள்
தென்காசியில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம்!
செய்திக்குறிப்புகள்: வாரந்தோறும் திங்கள்கிழமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள். இன்று முதல் துவங்க உள்ளதாக தென்காசி ஆட்சியர் அறிவிப்பு. தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமானது திங்கள்கிழமையான இன்று (07.03.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக இடையில் சரிவர நடைபெறாத நிலையில் இன்று முதல் ஒவ்வொரு […]
மேலும் படிக்க
இலஞ்சியில் வன உயிரின தின விழா.
செய்திக்குறிப்புகள்: இலஞ்சி பள்ளியில் வன உயிரின தின விழா. மாணவர்களுக்கு வன உயிரினங்கள் பாதுகாப்பு தலைப்பில் போட்டிகள். தமிழ்நாடு வனத்துறை., திருநெல்வேலி வனக்கோட்டத்தில் உள்ள குற்றாலம் வனச்சரகம் சார்பாக உலக வன உயிரின தின விழா இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ஆறுமுகம் தலைமை தாங்கிட உதவித் தலைமை ஆசிரியர்கள் திரு.சொர்ண சிதம்பரம், திருமதி. விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகிக்க, அறிவியல் ஆசிரியர் திரு.சுரேஷ்குமார் வரவேற்புறையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் […]
மேலும் படிக்க
தென்காசியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா!
செய்திக்குறிப்புகள்: தென்காசியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தென்காசி நகரில் உள்ள முக்கியப்பகுதியான திருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை நேற்று மாவட்ட […]
மேலும் படிக்க
மேலும் படிக்க
கன்னியாகுமரி செய்திகள்
சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த கன்னியாகுமரி!
செய்திக்குறிப்புகள்: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை. கன்னியாகுமரி கடலில் உற்சாக குளியல். உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றாக விளங்கும் கன்னியாகுமரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு கேரளம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில் விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் நேற்று […]
மேலும் படிக்க
குமரி மாவட்டத்திற்கு மார்ச்-8 உள்ளூர் விடுமுறை.
செய்திக்குறிப்புகள்: மண்டைக்காடு பகவதி கோவில் கொடை விழா 08/03/20022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வரும் 08/03/2022 அன்று மாசி கொடை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். எனவே மாசி கொடை விழா நடைபெறும் 08/03/2022 அன்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக ஏப்ரல் மாதத்தில் […]
மேலும் படிக்க
தோவாளையில் பூக்கள் விலை கடும் உயர்வு!
செய்திக்குறிப்புகள்: பூக்களின் விலை கடும் உயர்வு. பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.3000க்கு விற்பனை. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை பூக்கள் வாங்க மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் இங்கு பூக்கள் வாங்க தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து அதிகளவு வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வருவார்கள். தோவாளையில் தினம்தோறும் பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் […]
மேலும் படிக்க
மேலும் படிக்க
விருதுநகர் செய்திகள்
விருதுநகரில் பாமாயில் விலை கடும் உயர்வு!
விருதுநகர் சந்தையில் ரஷ்யா, உக்ரைன் போர் எதிரொலி காரணமாக பாமாயில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்றய நிலவரப்படி விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.2700 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.4208 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.440 உயர்ந்து ரூ. 2600 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 ஆகவும் விற்பனையான நிலையில் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர் சந்தையில் விற்பனையான மற்ற பொருட்களின் விலை நிலவரம்: உளுந்து 100 […]
மேலும் படிக்க
சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர் பதவியேற்பு!
செய்திக்குறிப்புகள்: சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற மேயர் தேர்தல். திருமதி. சங்கீதா இன்பம் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவகாசி மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மேயருக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திருமதி. சங்கீதா இன்பம் மனு தாக்கல் செய்தார். அவரின் விருப்ப மனு மாநகராட்சி ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மனுத்தாக்கலுக்கான நேரம் முடியும் வரை வேறு யாரும் மேயர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யாததால், திருமதி. சங்கீதா இன்பம் போட்டியின்றி மேயராக தேர்வு […]
மேலும் படிக்க
திருச்சுழி அருகே பழமையான தமிழ் கல்வெட்டு!
செய்திக்குறிப்புகள்: சுந்தரவல்லி அம்மன் கோவிலில் தமிழ் கல்வெட்டுக்கள். மிகப் பழமையானது என ஆய்வில் தகவல். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பரளச்சி சுந்தரவல்லி அம்மன் கோவிலில் இரண்டு பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகளை மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் திரு. முனீஸ்வரன் உதவியுடன் படி எடுத்து ஆய்வுகள் செய்தனர். இதில் இரண்டு கல்வெட்டுக்களும் மிகப் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது. சுந்தரவல்லி அம்மன் கோவில் வளாகத்தின் உட்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் […]
மேலும் படிக்க
மேலும் படிக்க

திருநெல்வேலி அன்றாட நிகழ்வுகள்

திருநெல்வேலி மாநகரம், மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், கலை நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், அரசியல் நிகழ்வுகள், ஆன்மீக நிகழ்வுகள் போன்ற அனைத்து தகவல்களையும் பற்றி இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

முந்தைய செய்திகள்

அதிக விலைக்கு உரம் விற்கும் கடைகளின் உரிமம் ரத்து! திருநெல்வேலி ஆட்சியர் எச்சரிக்கை!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு அவர்கள் அதிக விலைக்கு உரம் விற்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உரம் விற்பனை செய்யும் அனைத்து கடைகளிலும் விவசாயிகள் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைத்திருக்க வேண்டும். உர விற்பனை நிலையங்களில் விற்பனை முனையக்கருவி மூலம் உரங்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை […]
மேலும் படிக்க
தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள்!
கொரோனா பெருந்தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. வரும் திங்கள்கிழமை (05/07/2021) முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்படி மாநிலங்களுக்குள் நடைமுறையில் உள்ள ஈ-பாஸ், ஈ-பதிவு முறை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. உணவகங்கள், சிற்றுண்டி கடைகள், பேக்கரி கடைகள் மாற்று தேநீர் கடைகளில் 50% சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்து சேவை தொடங்க […]
மேலும் படிக்க
திருநெல்வேலி அரசு சித்த மருத்துவமனையில் நவீன ரத்த பரிசோதனை கருவி!
திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தற்போது நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இங்கு சுமார் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன ரத்த பரிசோதனை கருவி நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன கருவியின் செயல்பாட்டை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் துவக்கி வைத்தார். பொதுவாக நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல கோளாறுகளை கண்டறிய ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். நடைமுறையில் உள்ள ரத்த […]
மேலும் படிக்க
திருநெல்வேலி வழியாக செல்லும் நாகர்கோவில் - சென்னை அந்தியோதயா ரயில் இன்று முதல் இயக்கம்!
பொதுமக்களின் பயன்பாட்டைக் கருதி சென்னை - தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வரை அந்தியோதயா ரயில் சேவை துவக்கப்பட்டது. மற்ற ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்ய வேண்டிய நிலையில், அந்தியோதயா ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்பதால் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் திருநெல்வேலி வரை இயக்கப்பட்ட அந்தியோதயா ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. பின்னர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக இந்திய முழுவதும் […]
மேலும் படிக்க
திருநெல்வேலியில் டிரோன்களை பறக்க விட தடைவிதிக்கப்பட்டுள்ளது!
இந்திய எல்லைப்பகுதியான காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிரோன்கள் மூலமாக இந்திய விமானப்படை தளம் மற்றும் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனையடுத்து மத்திய அரசு, பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டில் உள்ள  ராணுவ முகாம்கள், அணு உலைகள், ஆராய்ச்சி மையங்கள், ஆயுத தொழிற்ச்சாலைகள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடைவிதித்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியிலும் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி நிலையம், […]
மேலும் படிக்க
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர், பொது இடங்களில் தேவையில்லாமல் கூட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரை!
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகளால் தொற்று குறைந்த மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாநகரில் பொது மக்கள் சகஜமாக வெளியே உலாவ தொடங்கியுள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணுசந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகர பகுதிகளில் பரவி வந்த கொரோனா பெருந்தொற்று மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அண்டை மாநிலங்களில் புதிய வகை டெல்டா […]
மேலும் படிக்க
மேலும் படிக்க
உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
திருநெல்வேலி செய்திகளின் தொகுப்பு
  • நிகழ்வுகள்!
  • முக்கிய செய்திகள்!
  • முக்கிய சம்பவங்கள்!
  • மாநகரில் இன்று!
  • அணைகளின் நீர் இருப்பு விவரம்!
  • வானிலை நிலவரம்!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top magnifiercrossarrow-righttext-align-justify