திருநெல்வேலி செய்திகள்

திருநெல்வேலி மாநகரம், மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களின் செய்திகள் இங்கு உங்களுக்காக!

இன்றைய செய்திகள்

மாநகர்
திருநெல்வேலி மாநகரில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரம் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் “சீர்மிகு நகரம்” திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டையில் ரூ.13.8 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நவீன பஸ்நிலைய கட்டுமான பணிகள், ரூ.14.27 கோடியில் புனரமைக்கப்படும் புதிய பேருந்து நிலைய வளாக வளர்ச்சி பணிகள், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.11.75 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்தும் இடம், மேலும் அதே வளாகத்தில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி இருசக்கர வாகன நிறுத்தும் இடம் பணிகள், ரூ.14 கோடியே 68 லட்சத்தில் […]
மேலும் படிக்க
திருநெல்வேலி மாநகராட்சி சம்பந்தமான புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிப்பு!
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குப்பைகள் தேக்கம், பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், வடிகால் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி ஆகியவற்றில் ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை ஏற்கனவே நடைமுறையில் உள்ள 94899 30261 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் அவர், இந்த வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கப்படும் குறைகள் / புகார்கள் சம்மந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கு […]
மேலும் படிக்க
பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் காணொளி மூலமாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பங்கு கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். இதில் மாநகராட்சியின் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இது போல பொதுமக்களுடன் காணொளி கலந்துரையாடல் நடைபெறும் என்றும், அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு […]
மேலும் படிக்க
1 2 3 23
மாவட்டம்
நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை!
செய்திக்குறிப்புகள்: திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு மாதமாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகலுக்கு மேல் மேகம் கருத்து, இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்தது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள பாபநாசம், விக்கரமசிங்கபுரம், சிவந்திபுரம், அகஸ்தியர்பட்டி, அம்பாசமுத்திரம், […]
மேலும் படிக்க
காரையார் கோவிலில் படையலிட்டு வணங்க அனுமதி!
செய்திக்குறிப்புகள்: கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் நீக்கம். காரையார் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்த அனுமதி. திருநெல்வேலி மாவட்டம்., பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலை மீது அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவில். களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக எல்லைக்குள் அமையப்பெற்றுள்ள இந்த கோவிலில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்கள் தரிசனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தரிசனத்திற்கு […]
மேலும் படிக்க
நெல்லையில் டீ, காபி விலை நேற்று முதல் உயர்வு!
செய்திக்குறிப்புகள்: வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி. திருநெல்வேலி மாநகர பகுதியில் டீ, காபி விலை உயர்வு. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை அடுத்து, வியாபாரிகள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலைகளையும் உயர்த்தி வருகின்றனர். திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் […]
மேலும் படிக்க
1 2 3 23
ஆன்மிகம்
திருச்செந்தூர் நாழிக்கிணறு சிறப்புகள்!
செய்திக்குறிப்புகள்: திருச்செந்தூரில் உள்ள நாழிக்கிணறு தீர்த்தம். முருகப்பெருமானே உருவாக்கியதாக ஐதீகம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள நாழிக்கிணறு தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த தீர்த்தத்தை முருகப்பெருமானே தனது வேலால் பூமியில் குத்தி உருவாக்கியதாக கூறப்படுகிறது. சூரசம்ஹாரம் முடிந்த வெற்றிக்களிப்பில் தனது படை வீரர்களின் தாகத்தை தணிக்கும் பொருட்டு, முருகப்பெருமான் உருவாக்கிய இந்த தீர்த்தம் இன்றும் கடற்கரையில் குடிப்பதற்கு உகந்த நல்ல நீராக சுரந்து கொண்டிருப்பது சிறப்பம்சம் ஆகும். இங்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடி […]
மேலும் படிக்க
தென்பாண்டி நாட்டில் உள்ள பஞ்சகுரோச ஸ்தலங்கள்!
செய்திக்குறிப்புகள்: பஞ்ச குரோச ஸ்தலங்கள் என்று சிறப்பிக்கப்படும் கோவில்கள். காசிக்கு நிகராக போற்றப்படுகிறது. தென்பாண்டி நாடு என்று அழைக்கப்படும் திருநெல்வேலி சீமையில் காசிக்கு சமமாக கருதப்படும் ஐந்து தலங்கள் உள்ளன. அவை பஞ்ச குரோச ஸ்தலங்கள் என்று சிறப்பித்து அழைக்கப்படுகின்றன. அவைகள்., 1. பாபநாசம் பாபவிநாசநாதர் திருக்கோவில். 2. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவில். 3. சிவசைலம் சிவசைலநாதர் திருக்கோவில். 4. ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் திருக்கோவில். 5. கடையம் வில்வவனநாதர் திருக்கோவில். Image source: Facebook.com
மேலும் படிக்க
தென்பாண்டிநாட்டின் பஞ்சபூத ஸ்தலங்கள்!
செய்திக்குறிப்புகள்: தென்பாண்டி நாட்டில் அமையப்பெற்றுள்ள பஞ்சபூத ஸ்தலங்கள். சங்கரன்கோவில் தொடங்கி தேவதானம் வரை ஒரே நாளில் தரிசிப்பது சிறப்பு. தென்பாண்டி நாடு என்று சிறப்பித்து அழைக்கப்படும் திருநெல்வேலிச் சீமையில் எண்ணற்ற சிவாலயங்கள் அமையப்பெற்றுள்ளன. அவற்றுள் பஞ்சபூதங்களான நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தத்துவத்தில் அமையப்பெற்றுள்ள கோவில்கள் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத ஸ்தலங்கள் என்று சிறப்பிக்கப்படுகின்றன. பஞ்ச பூத தலங்கள்: 1. நிலம்: சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மை உடனுறை ஸ்ரீ சங்கரநயினார் திருக்கோவில். 2. நெருப்பு: […]
மேலும் படிக்க
1 2 3 22

தற்போதைய பதிவுகள்

திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், தென்காசி மாவட்டம், குமரி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ஆகிய இடங்களில் நடைபெறக்கூடிய முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் சுடச்சுட உங்களுக்காக!
தூத்துக்குடி செய்திகள்
கலைஞர்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பம் செய்யலாம்!
செய்திக்குறிப்புகள்: தமிழக அரசின் கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்ட கலைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வில்லிசை ஆகிய கலைகளில் சிறந்து […]
மேலும் படிக்க
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா.
செய்திக்குறிப்புகள்: 190 வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தினம் விழா. திருச்செந்தூரில் குவிந்த அய்யாவழி பக்தர்கள். தூத்துக்குடி மாவட்டம்., திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் நேற்று 190-வது ஆண்டு அவதார தின விழா நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 5.00மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் காலை 7.00 மணியளவில் சூரிய உதயத்தில் கடலில் பதமிட்டு, அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் வைபவமும் நடைபெற்றது. பின்னர் மதியம் […]
மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 புதிய ஆம்புலன்ஸ்கள்!
செய்திக்குறிப்புகள்: தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள். மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் அரசு மருத்துவமனை, நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு 3 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை மக்கள் பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செந்தில்ராஜ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மக்கள் […]
மேலும் படிக்க
1 2 3 14
மேலும் படிக்க
தென்காசி செய்திகள்
தென்காசியில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம்!
செய்திக்குறிப்புகள்: வாரந்தோறும் திங்கள்கிழமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள். இன்று முதல் துவங்க உள்ளதாக தென்காசி ஆட்சியர் அறிவிப்பு. தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமானது திங்கள்கிழமையான இன்று (07.03.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக இடையில் சரிவர நடைபெறாத நிலையில் இன்று முதல் ஒவ்வொரு […]
மேலும் படிக்க
இலஞ்சியில் வன உயிரின தின விழா.
செய்திக்குறிப்புகள்: இலஞ்சி பள்ளியில் வன உயிரின தின விழா. மாணவர்களுக்கு வன உயிரினங்கள் பாதுகாப்பு தலைப்பில் போட்டிகள். தமிழ்நாடு வனத்துறை., திருநெல்வேலி வனக்கோட்டத்தில் உள்ள குற்றாலம் வனச்சரகம் சார்பாக உலக வன உயிரின தின விழா இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ஆறுமுகம் தலைமை தாங்கிட உதவித் தலைமை ஆசிரியர்கள் திரு.சொர்ண சிதம்பரம், திருமதி. விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகிக்க, அறிவியல் ஆசிரியர் திரு.சுரேஷ்குமார் வரவேற்புறையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் […]
மேலும் படிக்க
தென்காசியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா!
செய்திக்குறிப்புகள்: தென்காசியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தென்காசி நகரில் உள்ள முக்கியப்பகுதியான திருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை நேற்று மாவட்ட […]
மேலும் படிக்க
1 2 3 14
மேலும் படிக்க
கன்னியாகுமரி செய்திகள்
சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த கன்னியாகுமரி!
செய்திக்குறிப்புகள்: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை. கன்னியாகுமரி கடலில் உற்சாக குளியல். உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றாக விளங்கும் கன்னியாகுமரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு கேரளம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில் விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் நேற்று […]
மேலும் படிக்க
குமரி மாவட்டத்திற்கு மார்ச்-8 உள்ளூர் விடுமுறை.
செய்திக்குறிப்புகள்: மண்டைக்காடு பகவதி கோவில் கொடை விழா 08/03/20022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வரும் 08/03/2022 அன்று மாசி கொடை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். எனவே மாசி கொடை விழா நடைபெறும் 08/03/2022 அன்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக ஏப்ரல் மாதத்தில் […]
மேலும் படிக்க
தோவாளையில் பூக்கள் விலை கடும் உயர்வு!
செய்திக்குறிப்புகள்: பூக்களின் விலை கடும் உயர்வு. பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.3000க்கு விற்பனை. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை பூக்கள் வாங்க மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் இங்கு பூக்கள் வாங்க தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து அதிகளவு வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வருவார்கள். தோவாளையில் தினம்தோறும் பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் […]
மேலும் படிக்க
1 2 3 14
மேலும் படிக்க
விருதுநகர் செய்திகள்
விருதுநகரில் பாமாயில் விலை கடும் உயர்வு!
விருதுநகர் சந்தையில் ரஷ்யா, உக்ரைன் போர் எதிரொலி காரணமாக பாமாயில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்றய நிலவரப்படி விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.2700 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.4208 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.440 உயர்ந்து ரூ. 2600 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 ஆகவும் விற்பனையான நிலையில் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர் சந்தையில் விற்பனையான மற்ற பொருட்களின் விலை நிலவரம்: உளுந்து 100 […]
மேலும் படிக்க
சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர் பதவியேற்பு!
செய்திக்குறிப்புகள்: சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற மேயர் தேர்தல். திருமதி. சங்கீதா இன்பம் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவகாசி மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மேயருக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திருமதி. சங்கீதா இன்பம் மனு தாக்கல் செய்தார். அவரின் விருப்ப மனு மாநகராட்சி ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மனுத்தாக்கலுக்கான நேரம் முடியும் வரை வேறு யாரும் மேயர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யாததால், திருமதி. சங்கீதா இன்பம் போட்டியின்றி மேயராக தேர்வு […]
மேலும் படிக்க
திருச்சுழி அருகே பழமையான தமிழ் கல்வெட்டு!
செய்திக்குறிப்புகள்: சுந்தரவல்லி அம்மன் கோவிலில் தமிழ் கல்வெட்டுக்கள். மிகப் பழமையானது என ஆய்வில் தகவல். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பரளச்சி சுந்தரவல்லி அம்மன் கோவிலில் இரண்டு பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகளை மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் திரு. முனீஸ்வரன் உதவியுடன் படி எடுத்து ஆய்வுகள் செய்தனர். இதில் இரண்டு கல்வெட்டுக்களும் மிகப் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது. சுந்தரவல்லி அம்மன் கோவில் வளாகத்தின் உட்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் […]
மேலும் படிக்க
1 2 3 14
மேலும் படிக்க

திருநெல்வேலி அன்றாட நிகழ்வுகள்

திருநெல்வேலி மாநகரம், மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், கலை நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், அரசியல் நிகழ்வுகள், ஆன்மீக நிகழ்வுகள் போன்ற அனைத்து தகவல்களையும் பற்றி இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

முந்தைய செய்திகள்

திருநெல்வேலியில் தாமரை மலர்ந்து விட்டது.!!
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 8 வாக்காளர்கள் உள்ள திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கும் கடந்த மாதம்  6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 496 வாக்குகள் பதிவாகின. இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா  சார்பில் நயினார் நாகேந்திரன், தி.மு.க. சார்பில் லட்சுமணன், அ.ம.மு.க. சார்பில் மகேஷ் கண்ணன், நாம் தமிழர் கட்சி […]
மேலும் படிக்க
திருநெல்வேலி மாநகரில் நேற்று பரவலாக பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்தது...!
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தற்போது அக்னி நட்சத்திர காலமும் ஆரம்பித்து விட்டதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனைச் சமாளிக்க முடியாமல் மக்கள் அனைவரும் திணறி வரும் நிலையில், நேற்று மாநகரின் முக்கிய இடங்களில் பகல் மற்றும் மாலை வேளையில் பரவலாக கோடை மழை பெய்தது. திடீரென்று பெய்த இந்தக் கோடை மழையால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது. மாநகரில் திருநெல்வேலி டவுன், சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் […]
மேலும் படிக்க
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சார்பாக உணவு பொட்டலங்கள் விநியோகம்.
கொரோனா நோய் தொற்று தற்போது பரவலாகப் பெருகி வரும் சூழ்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று காரணமாகப் பலர் சிகிச்சை பெற மருத்துவமனையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தமிழக அரசு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் திருக்கோவில்கள்  நிர்வாகம் சார்பாகவும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் […]
மேலும் படிக்க
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் 2000 கபசுர குடிநீர் பொட்டலங்கள் விநியோகம்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் கொரோனா நோய்த் தொற்றை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் சுமார் 2 ஆயிரம் நபர்களுக்கு கபசுர குடிநீர் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பாளையங்கோட்டை, சமாதானபுரம், முனிசிபல் காலனி, காமராஜ் நகர், டாக்டர் அம்பேத்கர் நகர்  மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சுமார் இரண்டாயிரம் […]
மேலும் படிக்க
நெல்லை மாநகர முருகன் கோவில்களில் நடைபெற்ற வைகாசி விசாகம் வழிபாடு.
வைகாசி விசாகம் அன்று தான் தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமான் அவதரித்தார். எனவே ஆண்டுதோறும் வைகாசி விசாகம் அன்று முருகன் கோவில்களில் சிறப்பு விழாக்கள் மற்றும் பூஜைகள் விமரிசையாக நடைபெறும். தற்போது கொரோனா தொற்று காரணமாக திருக்கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு, தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் நேற்று நடைபெற்ற வைகாசி விசாக விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் பக்தர்கள் முருகன் கோவில்களின் வாசலில் நின்றபடியே கற்பூரம் ஏற்றி வைத்தும், தேங்காய் […]
மேலும் படிக்க
நெல்லை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவர்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது!
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் மருத்துவர்களை தற்காலிகமாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது பல மருத்துவர்கள், செவிலியர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க கூடுதலாக தற்காலிக மருத்துவர்களை நியமிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான நேர்முகத்தேர்வு […]
மேலும் படிக்க
1 2 3 28
மேலும் படிக்க
உதவிக்கு அழைக்க
 • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
 • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
 • போக்குவரத்து காவல்துறை : 103
 • மருத்துவ உதவி எண் : 104
 • தீயணைப்பு துறை : 101
 • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
 • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
 • குழந்தைகள் நலம் : 1098
 • பாலியல் துன்புறுத்தல் : 1091
 • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
திருநெல்வேலி செய்திகளின் தொகுப்பு
 • நிகழ்வுகள்!
 • முக்கிய செய்திகள்!
 • முக்கிய சம்பவங்கள்!
 • மாநகரில் இன்று!
 • அணைகளின் நீர் இருப்பு விவரம்!
 • வானிலை நிலவரம்!
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top arrow-right