திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருள்மிகு ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலில் வருஷாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது .நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி அருள்மிகு ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் புகழ் பெற்ற ஸ்தலமாக விளங்குகின்றது.
விசேஷ நாட்களில் இந்த திருத்தலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்து ஸ்ரீ வெங்கடாஜலபதியை தரிசனம் காண்பது, திருவிழாவில் தீபாராதனை, திருவீதி உலா என அனைத்தையும் கண்டு களிப்பர்.
இந்த திருக்கோவிலில்நடைபெற்ற வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மகா சங்கல்பம், கணபதி ஹோமம் தொடர்ந்து , விநாயகர், பெருமாள் மற்றும் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்படும் நிகழ்ச்சி அனைத்தும் பக்தர்களின்முன்னிலையில் இனிதாக நடைபெற்றது .
சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. அன்று மாலை ஸ்ரீ வெங்கடாஜலபதிக்கு தீபாராதனை மற்றும் இரவில் கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருகை புரிந்து இருந்தனர் .பூஜை விழாக்களை பக்தி பரவசத்தோடு கண்டுகளித்தனர். தரிசனம் செய்தனர் . சென்னை ராஜபுரம் தெரு சேவார்த்திக் குழுவினர் திருவிழா ஏற்பாடுகளை வெகு விமரிசையாக செய்திருந்தனர்.