செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் திருநெல்வேலி மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி மக்கள் மனு அளித்தனர்.
- செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்என்று மேயர் பி எம் சரவணன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரவேண்டும் எனக் கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேயர் பி. எம் சரவணனிடம் மக்கள் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமையன்று திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மேயர் பிஎம் சரவணன் இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார். துணை மேயர் கே .ஆர். ராஜு அவர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது . 22வது வார்டு சுதந்திர விநாயகர் கோவில் கீழத் தெரு பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க கோரி மக்கள் மனு அளித்தனர்.
55வது வார்டில் மழைநீர் வடிகால் தூர்வாருதல் , கான்கிரீட் சாலை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மனு அளித்தனர். 18வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு அளிக்கப்பட்டது .பத்துப்பாட்டு, திருநீலகண்ட நாயனார் தெரு , வண்ணாரப்பேட்டை தெருக்களில் கழிவு நீரோடையை சீரமைத்து தர வேண்டும் மற்றும் மேலநத்தம் பகுதியில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து தரக் கோரியும் மனு அளிக்கப்பட்டது. பேட்டை, சத்யா நகர் மற்றும் வ உ சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று மனு அளித்தனர். எஸ் டி பி ஐ கட்சியினர் மேலப்பாளையம் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும், மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று மனு அளித்தனர்.
கோரிக்கை மனு அளித்த அனைவருக்கும் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று மேயர் பி .எம் சரவணன் தெரிவித்தார் . தச்சநல்லூர் மண்டல தலைவர் செயற்பொறியாளர்கள் வாசுதேவன் மாமன்ற உறுப்பினர்கள் ஜெகநாதன் மண்டல உதவி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா மற்றும் பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.