செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை அன்று இரண்டு உதவி மையங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
- மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு இந்த உதவி மையங்களை திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை உதவி மைய திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மையங்களை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு அவர்கள் திறந்து வைத்தார்.
நீதித்துறையில் இதுவரை நடந்துவந்த முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு உதவும் வகையில் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இரண்டு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து பதிவுகளும் மின்னணு முறையில் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மையங்களையும் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு அவர்கள் தொடங்கிவைத்து முன்னிலை வகித்தார். இந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற நீதிபதி ஷமீனா, நீதிபதிகள் செந்தில் முரளி, இசக்கியப்பன் ,அமிர்தவேலு மற்றும் சங்கத் தலைவர் ராஜேந்திரன், உதவி தலைவர் சீதா , செயலர் காமராஜ் ,உதவிச் செயலர் பரமசிவன்,வழக்கறிஞர்கள் பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.