செய்திக்குறிப்புகள்:
- நெல்லையில் கண் தானம் செய்த 62 குடும்பத்தினரை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் வே.விஷ்ணு கலந்து கொண்டார்.
- நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் வே. விஷ்ணு தன் கண்களை தானம் செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தேசிய கண் மருத்துவமனைதுறை ஆகியவற்றின் சார்பில் இரு வார நிகழ்ச்சியாக தேசிய கண் தான நிகழ்ச்சி நடைபெற்றது.
தன்னுடைய கண்களை தானம் செய்த 62 குடும்பத்தினரை பாராட்டும் விதமாக பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் கலந்து கொண்டார். பாராட்டுச் சான்றிதழ் கேடயங்களை வழங்கி கௌரவித்தார் .அந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு தன்னுடைய கண்களை தானம் செய்வதற்கான உறுதிமொழி படிவத்தை எழுதி பூர்த்தி செய்து மருத்துவ துறை அதிகாரியிடம் கொடுத்தார் .
அதைத்தொடர்ந்து இளநிலை மருத்துவர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள்,பொதுநிலை மருத்துவர்கள் போன்றவர்கள் கண்தான விழிப்புணர்வு பற்றிய கவிதை போட்டி கட்டுரைப் போட்டி ரங்கோலி வினாடி வினா போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை வே. விஷ்ணு வழங்கினார் .
முதல்வர் ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம், கண் மருத்துவத் துறை தலைவர் ராமலட்சுமி, கண் மருத்துவத் துறை இணைப் பேராசிரியர் சாவித்திரி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Image source: dailydhanthi.com