செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் இன்றியமையா சட்டம் 1955 ன் கீழ் வர்த்தகர்கள் தங்களுடைய பருப்பு, இருப்பு விவரங்கள் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
- சட்டத்தை மீறி பருப்புகளை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பருப்பு வகைகளை பதுக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்துஆட்சியர் தம்முடைய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்றியமையா சட்டம் 1955 ன் கீழ் , அரவை முகவர்கள், இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள் தங்களுடைய நிலுவை இருப்பு விவரங்களை இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது .
பண்டிகை காலங்களில் பருப்பு பதுக்கலை தடுக்கும் நோக்கோடு அனைத்து மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களில் கண்காணிக்கும் விதத்தில் இதைசெயல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ,பாசிப்பருப்பு முதலியபருப்புகளை பதுக்கும் நோக்கத்தோடு யாராவது செயல்பட்டால் அதற்கான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து முகவர்கள், பெரும் வணிகர்கள், அரவை முகவர்கள், ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய பருப்பு வகைகளின் இருப்புநிலை விவரங்களை தினந்தோறும் இணைய தளத்தில் பதிவிட வேண்டும் என்று தம்முடைய செய்திக்குறிப்பில் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.