செய்திக்குறிப்புகள்:
- நெல்லை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் விழிப்புணர்வு கையேடு அடங்கிய பெட்டகம் மற்றும் வங்கி பரிவர்த்தனை அட்டை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தினை திங்கட்கிழமை அன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார் .
அதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்திற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு அவர்கள் தலைமை தாங்கினார் . திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சா. ஞான திரவியம் மாநகராட்சி மேயர் பி.எம் , சரவணன் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மு .அப்துல் வஹாப் , துணை மேயர் கே ஆர் ராஜு மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பெண்களுக்கான விழிப்புணர்வு கையேடு அடங்கிய பெட்டகம் மற்றும் வங்கி பரிவர்த்தனை அட்டைகள் வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தன் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கூடுதலாக உதவி பெறவும், கல்வி உதவித்தொகை பெறவும் ஏற்பாடு செய்யப்படும். மொத்தம் 2597 மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். இதற்கான முதல் தொடக்கமாக 544 மாணவர்களுக்கு வங்கியின் பண வர்த்தனை அட்டைகள் வழங்கப்பட்டது.
Image source: dailydhanthi.com