பூலோகத்தை காப்பதற்கு அவதாரமெடுத்த வராகமூர்த்தி பன்றி உருவத்தில் பக்தர்களுக்கு காட்சி அருள்கின்றார்.அவருக்கு உதவி செய்வதற்காக வராகியம்மன் எழுந்தருளினார் என்பது வரலாறு . ஆபத்து எங்கு இருக்கின்றதோ அங்கெல்லாம் வராகி அம்மன் வந்து காப்பாற்றுவாள் என்பது ஐதீகம்.
நமக்குத் துன்பம் நேரும்போது வராகி அம்மனை மனதார வழிபட்டால் வந்த துன்பமும் பனி போல் நீங்கி விடும், ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றுபவளும் அவளே .. சகல சௌபாக்கியம் வரங்கள் அனைத்தும் கொடுப்பவளும்அவளே ..நமக்கு சக்தியை கொடுத்து வாழ்க்கையில் நலம் கொடுப்பவளும்அவளே. வராகி அம்மன் பன்றி உருவத்தில் எழுந்தருளியதால் நாராயணனின் அம்சமாக விளங்குகிறாள்.வராகி அம்மனின் திருஉருவ படத்தை விசேஷமாக வைத்து வழிபட்டால், கூடிய விரைவில் சகல சவுபாக்கியங்களும் நமக்கு கிடைக்கும். நமக்கு ஒரு தாயாக இருந்து நம்மை காக்கின்றாள். அவளுக்கு மிகவும் பிடித்தது மரவள்ளிக்கிழங்கு என்பதால் நிவேதனமாக மரவள்ளிக்கிழங்கு வெண்பூசணிக்காய் பிரசாதமாக வைக்கலாம்.
வராகி அம்மனுக்கு நைவேத்தியங்கள் வைத்து படைப்பது , வீடு முழுவதும் சாம்பிராணி, வெண்கடுகு போட்டு தூபம் காட்டுவது ..இப்படி செய்வதால் வராகி அம்மனின் அருளை நாம் முழுமையாகப் பெறுவோம். தொடர்ந்து இவ்வாறு செய்வதால் வராகி அம்மன் அனுக்கிரகத்தை நாம் முழுமையாகப் பெற்று துன்பங்கள் அனைத்தும் விலகி வாழ்வினில் நல்ல முன்னேற்றங்களை காணலாம்.
தொடர்ந்து 48 நாட்கள் பிரம்ம முகூர்த்தத்தில் வராகி அம்மனை வழிபட்டு வந்தால் , கண்திருஷ்டி பொறாமை ,பில்லி சூனியம் , ஏவல் துஷ்ட சக்திகள் , அனைத்தும் மாயமாக மறைந்துவிடும். வராகி அம்மனை நாம் அனைவரும் தொடர்ந்து வழிபட்டு அனைத்து நலனும் பெற்று சிறப்பு காண்போம்.
Image source: Aanmeegam.com