செய்திக்குறிப்புகள்:
- நெல்லை அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 30,658 பேருக்கு 8 -9 - 2022 வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 8 -9 - 2022 வியாழக்கிழமை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார். 30,658 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
திருநெல்வேலி மாநகராட்சி ஊராட்சித் துறை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை சட்ட கல்வித்துறை, குடிநீர் வழங்கல் துறை, உழவர் நலத்துறை ,இந்திய மருத்துவம் பள்ளிக்கல்வித்துறை ,ஓமியோபதி துறைகளில் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இருந்தன. அவை அனைத்தையும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.
கால்நடை பராமரிப்பு துறை. ஊரக வளர்ச்சி கல்வித்துறை. நகராட்சி நிர்வாகம் மீன்வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவக் கல்வித் துறை ,பள்ளிக்கல்வித்துறை போன்ற துறைகளில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
கூட்டுறவு துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,ஊரக வளர்ச்சி துறை ,சமூக நலன் மகளிர் உரிமை துறை,தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம், முன்னோடி வங்கி தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை பள்ளி கல்வித்துறை, மலைப்பயிர்கள் துறை, மருத்துவம் மக்கள் நலவாழ்வு துறை என அனைத்துத் துறைகளின் சார்பில் 30,658 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.
திருநெல்வேலி மாநகர காவல் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Image source: dailydhanthi.com