செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
- மக்கள் பொதுவிநியோகத் திட்டசேவை குறைபாடுகள் போன்ற அனைத்தும் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் சனிக்கிழமை பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்று வருகிறது. பொது விநியோக திட்ட சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு இந்தத் திட்டம் செயல்படுகிறது .
அதன்படி இன்று நடைபெறும் குறைதீர் கூட்ட முகாமில் உங்களுக்கு ஏதேனும் குறை இருந்தால் விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றம்,புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல் மற்றும் முகவரி மாற்றம், குடும்ப அட்டையில் கைபேசி எண் மாற்றம் செய்தல், அத்தியாவசியப் பொருள்களின் தரம் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள் மற்றும் சேவை குறைபாடுகள் போன்ற அனைத்தும் குறித்து மக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இதற்காக விண்ணப்பிக்க செல்லும் பயனர்கள் அதற்குரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் .ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், நீங்கள் குடியிருக்கும் முகவரி அதற்கான ஆதார ஆவணங்கள் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். கைபேசி எண் மாற்றம் இருந்தால் கைப்பேசியும் எடுத்துச் செல்லவும். பொதுவிநியோக கட்டுப்பாட்டு அறை எண் 9342471314 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .