செய்திக்குறிப்புகள்:
மண்டைக்காடு பகவதி கோவில் கொடை விழா
08/03/20022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வரும் 08/03/2022 அன்று மாசி கொடை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள்.
எனவே மாசி கொடை விழா நடைபெறும் 08/03/2022 அன்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக ஏப்ரல் மாதத்தில் வரும் இரண்டாவது சனிக்கிழமையான 09/04/2022 அன்று வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.