செய்திக்குறிப்புகள்:
பூக்களின் விலை கடும் உயர்வு.
பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.3000க்கு விற்பனை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை பூக்கள் வாங்க மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் இங்கு பூக்கள் வாங்க தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து அதிகளவு வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வருவார்கள்.
தோவாளையில் தினம்தோறும் பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும் நிலையில் அய்யா வைகுண்டர் அவதார தினம் இன்று கொண்டாடப்படுவதை ஓட்டி பூக்களின் தேவை அதிகரித்ததால் நேற்றே பூக்களின் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.1250 க்கு விற்பனையான பிச்சிப்பூ நேற்று ரூ. 3000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல மற்ற பூக்களின் விலையும் அதிகரித்தே காணப்பட்டது.
மற்ற பூக்களின் விலை நிலவரம்:
முல்லை ரூ.2500
அரளி ரூ.220
மல்லிகை ரூ.1200
சம்பங்கி ரூ.250
கனகாம்பரம் ரூ.550
வாடாமல்லி ரூ.80
துளசி ரூ.45
தாமரை (100 எண்ணம்) ரூ.1500
கோழிக்கொண்டை பூ ரூ.60
பச்சை (ஒரு கட்டு) ரூ.8
ரோஸ் பாக்கெட் ரூ.30
பட்டன் ரோஸ் ரூ.160
ஸ்டெம் ரோஸ் (ஒரு கட்டு) ரூ.200
மஞ்சள் கேந்தி ரூ.50
சிவப்பு கேந்தி ரூ.60
மஞ்சள் செவ்வந்தி ரூ.220
வெள்ளை செவ்வந்தி ரூ.230
கொழுந்து ரூ.100
மரிக்கொழுந்து ரூ.120