- வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் துவங்கியது.
- விரதமிருந்து காவி உடை அணிந்த பக்தர்கள் ஓடியே சென்று கோவில்களில் தரிசனம்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம் நேற்று மாலை முதல் தொடங்கியது. இதில் தமிழக, கேரள மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து கலந்து கொண்டு முன்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு சிவன் கோவில், திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிப்பாகம் மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டர் கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கரநாராயணர் கோவில் ஆகிய பன்னிரெண்டு திருக்கோவில்களுக்கும் ஓடியே சென்று தரிசித்து வருகின்றனர்.
இன்றும் சிவாலய ஓட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் காவலர்கள் சாலைகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.