- திற்பரப்பு அருவியில் குளிக்க இலவச அனுமதி.
- சிவாலய ஓட்டத்தில் பங்குபெறும் பக்தர்கள் மகிழ்ச்சி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வருடம்தோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் நிகழ்வு நடைபெறும்.
இந்த ஆண்டு வரும் 01/03/2022 அன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுவதை ஒட்டி 28/02/2022 முதல் சிவாலய ஓட்டம் துவங்க உள்ளது. சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் திற்பரப்பு அருவியில் குளித்து விட்டு அருகில் உள்ள சிவாலயமான மகாதேவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதையொட்டி வருகிற 28/02/2022 மற்றும் 01/03/2022 ஆகிய தேதிகளில் அருவியில் குளிக்க கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Image Source: dailythanthi