- மண்டைக்காடு மாசி கொடை விழா துவக்கம்.
- செண்டை மேளம், தவில், நாதஸ்வரம் முழங்க கொடியேற்றம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று போற்றப்படுகிறது. இந்த கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் பெண் பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து அம்மனை வழிபடுவது வழக்கம்.
பிரசித்தி பெற்ற இந்த பகவதியம்மன் கோவிலின் மாசி கொடை விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 5.00 மணிக்கு கணபதி ஹோமமும், 6.00 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6.30 மணிக்கு உஷத்கால பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மேல் மூலஸ்தானத்தில் இருந்து திருக்கொடி மேள தாளத்துடன் புறப்பட்டு, கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட, கோவிலின் முன்புள்ள கொடிமரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் மனோ தங்கராஜ், விஜயகுமார் எம்.பி., குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், திருக்கோவில் நிர்வாக இணை செயலாளர் ஞானசேகர், கல்குளம் தாசில்தார் வினோத், சிறப்பு தாசில்தார் ரமேஷ், கோவில் தந்திரி சங்கர நாராயணன், கண்காணிப்பாளர் செந்தில்குமார் உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Image source: dailythanthi.com