செய்திக்குறிப்புகள்:
மண்டைக்காடு கோவிலில் காவல்துறை பாதுகாப்பு பணி.
தென்மண்டல ஐ. ஜி நேரில் ஆய்வு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவை காண தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெறுவார்கள் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை தென் மண்டல காவல்துறை ஐ.ஜி திரு.அன்பு அவர்கள் மண்டைக்காடு கடற்கரை, கோவில் வளாக பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது குமரி மாவட்ட காவல்துறை ஆணையாளர் திரு பத்ரி நாராயணன், குளச்சல் துணை காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தங்கராமன் ஆகியோர் உடனிருந்தனர்.