- சிவலாய ஓட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
- 12/03/2022 அன்று வேலை நாளாக இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி அன்று திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு, திருநட்டாலம் ஆகிய கோவில்களுக்கு ஓட்டமாக சென்று பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.
இந்த சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி குமரி மாவட்டத்திற்கு வரும் 01/03/2022 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக 12/03/2022 அன்று வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. அரவிந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.