- சுசீந்திரம் கோவிலில் நான்கு கால வழிபாடுகள்.
- இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையசுவாமி திருக்கோவில். மும்மூர்த்திகளின் அம்சமாக மூலவர் காட்சித் தரும் இந்த கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி நேற்று இரவு முழுவதும் திருக்கோவில் நடைகள் திறந்து வைக்கப்பட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. ஒவ்வொரு கால பூஜையின் போதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேங்கள் நடைபெற்று, தங்க அங்கி சாத்தி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பெற்று சுவாமி தரிசனம் செய்தார்கள்.
Image source: Facebook.com