செய்திக்குறிப்புகள்:
- உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க துரித நடவடிக்கை.
- தூத்துக்குடி மாணவர்களின் விவரங்களை தெரியப்படுத்த தொடர்பு எண்கள் அறிவிப்பு.
உக்ரைன் நாட்டில் தற்போது போர் நடைபெற்று வருவதால் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாணவர்களும் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளதை அடுத்து அம்மாணவர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செந்தில்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வரும் மாணவர்களின் விவரங்களை அரசுக்கு தெரிவிக்கும் வகையில், தொடர்பு அலுவலராக மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரிடம் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.
செல்போன் எண் : 94450 08155 மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் : 0461-2340101, 2340603.
மேலும் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரான ஜெசிந்தா லாசரஸ் அவர்களிடமும் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.
செல்போன் எண்கள்: 9445869848, 9600023645, 9940256444.
மாநில கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் : 1070.
Image Source: facebook.com