செய்திக்குறிப்புகள்:
தென்காசியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தென்காசி நகரில் உள்ள முக்கியப்பகுதியான திருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை நேற்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் அவர்கள் தொடங்கி வைத்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
இந்த அதிநவீன கண்காணிப்பு கேமரா மூலம், சாலையில் செல்லும் அனைத்து வாகன எண்களையும் தானியங்கி முறையில் புகைப்படமாக எடுத்து பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.