செய்திக்குறிப்புகள்:
இயற்கை உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி.
மாவட்ட ஆட்சியர் காய்கறிகளில் உருவாக்கப்பட்ட விளக்கை ஏற்றி வைத்தார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நேற்று இயற்கை உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஏற்கனவே 9 யூனியன் அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற தலா 3 மகளிர் சுய உதவிக்குழுக்கள் வீதம் மொத்தம் 27 குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் தலைமை தாங்கி காய்கறிகளில் உருவாக்கப்பட்ட விளக்கை ஏற்றி வைத்து துவக்கி வைத்த இந்த போட்டியில் பாரம்பரியமிக்க இயற்கை உணவு வகைகள், ஊட்டச்சத்து உணவு வகைகள், சிறுதானிய உணவுகள், இயற்கை மூலிகைச்சாறுகள் என பல்வேறு இயற்கை உணவு வகைகளை தயார் செய்து காட்சிப்படுத்தி இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி, மாநில பயிற்சியாளர் விசுவநாதன், உதவி திட்ட அலுவலர் அன்னசெல்வம் உட்பட அனைத்து வட்டார பணியாளர்களும் கலந்து கொண்டனர்.