செய்திக்குறிப்புகள்:
இலஞ்சி பள்ளியில் வன உயிரின தின விழா.
மாணவர்களுக்கு வன உயிரினங்கள் பாதுகாப்பு தலைப்பில் போட்டிகள்.
தமிழ்நாடு வனத்துறை., திருநெல்வேலி வனக்கோட்டத்தில் உள்ள குற்றாலம் வனச்சரகம் சார்பாக உலக வன உயிரின தின விழா இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ஆறுமுகம் தலைமை தாங்கிட உதவித் தலைமை ஆசிரியர்கள் திரு.சொர்ண சிதம்பரம், திருமதி. விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகிக்க, அறிவியல் ஆசிரியர் திரு.சுரேஷ்குமார் வரவேற்புறையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் அழிந்து வரும் வன உயிர்களை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குற்றாலம் வனச்சரக வனவர் திரு.பிரகாஷ் அவர்கள் மூலம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஓவியக் கழக மாணவர்கள் உதிர்ந்து காய்ந்த இலை சருகுகளை பயன்படுத்தி உருவாக்கியிருந்த யானை ஓவியம் அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.