- 12/03/2022 அன்று லோக் அதாலத் நடைபெறுகிறது.
- நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு காண ஆலோசனை.
சிவகிரி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 12/03/2022 அன்று நடைபெற இருக்கும் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள், காவல்நிலைய வழக்குகள், வனத்துறை வழக்குகள், வருவாய் துறை வழக்குகள் போன்ற வழக்குகளுக்கு சமரச தீர்வுகள் காண்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. இதில் சிவகிரி வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான கே.எல்.பிரியங்கா அவர்கள் பங்குபெற்று , நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.
Image source: dailythanthi.com