செய்திக்குறிப்புகள்:
வாரந்தோறும் திங்கள்கிழமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள்.
இன்று முதல் துவங்க உள்ளதாக தென்காசி ஆட்சியர் அறிவிப்பு.
தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமானது திங்கள்கிழமையான இன்று (07.03.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக இடையில் சரிவர நடைபெறாத நிலையில் இன்று முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் எனவும் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.