செய்திக்குறிப்புகள்:
தென் மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி.
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட பளு தூக்கும் சங்கம் சார்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, தேனி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த வீரர்களுக்கான தென் மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் துவங்கி நடைபெற்றது.
18 வயதுக்கு உட்பட்டவர், 23 வயதுக்குட்பட்டோர், சீனியர், மாஸ்டர் என 4 பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டிகளை ஸ்ரீவைகுண்டம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் அவர்களின் மனைவி ஷீபா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வருகிற 19/03/2022 அன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கு பெற தகுதி பெற முடியும் என்பதால் பல வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.