செய்திக்குறிப்புகள்:
வீராணம் டைகர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற கபடி போட்டி.
மின்னொளியில் நடைபெற்ற இந்த போட்டியில் 150 அணிகள் பங்கேற்றன.
தென்காசி மாவட்டத்தில் உள்ள வீராணத்தில் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. டைகர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டிக்கு முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் திரு. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
சுமார் 150 அணிகள் பங்குபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற 8 அணிகளுக்கு பரிசுத்தொகையும், சுழல் கோப்பையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சுரண்டை காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ், எஸ். ஐ அன்னலட்சுமி ஆகியோரும் பார்வையாளர்களாக திரளான பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.