செய்திக்குறிப்புகள்:
கொக்கிரக்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.
காலை 9.00 முதல் மாலை 5.00 வரை மின் விநியோகம் ரத்து.
திருநெல்வேலி மாநகரில் உள்ள கொக்கிரக்குளம் துணை மின் நிலையத்தில் வரும் 05/03/2022 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் ரத்து செய்யப்படும் என திருநெல்வேலி நகர்ப்புற மின் விநியோக செயற்பொறியாளர் திரு. முத்துக்குட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள்:
திருநெல்வேலி சந்திப்பு
கொக்கிரகுளம்
மீனாட்சிபுரம்
வடக்கு புறவழிச்சாலை பகுதி
தெற்கு புறவழிச்சாலை பகுதி
வண்ணார்பேட்டை
இளங்கோ நகர்
பரணி நகர்
நெல்லை சந்திப்பு முதல் கதீட்ரல் வரையிலான திருவனந்தபுரம் சாலை
புதுப்பேட்டை தெரு
சுப்பிரமணியபுரம்