- அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை.
- வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வறுத்தெடுத்து வந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் கடையம், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையநல்லூர், புளியங்குடி, வீரசிகாமணி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் சாரல் மற்றும் பரவலான மழை பெய்தது.
குற்றாலத்தில் பெய்த மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்தில் பெரிய அளவு மாற்றம் இல்லை என்றாலும், சுற்றுலா பயணிகளின் கூட்டம் சுமாராக காணப்பட்டது. நேற்று பரவலாக பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.