செய்திக்குறிப்புகள்:
190 வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தினம் விழா.
திருச்செந்தூரில் குவிந்த அய்யாவழி பக்தர்கள்.
தூத்துக்குடி மாவட்டம்., திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் நேற்று 190-வது ஆண்டு அவதார தின விழா நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 5.00மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் காலை 7.00 மணியளவில் சூரிய உதயத்தில் கடலில் பதமிட்டு, அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் வைபவமும் நடைபெற்றது.
பின்னர் மதியம் உச்சிபடிப்பு, பணிவிடை, அன்னதர்மும், இரவில் பணிவிடையை தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் அகிலத்திரட்டில் அதிகம் வலியுறுத்துவது சமய புரட்சியா? சமுதாய புரட்சியா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியும், ஸ்ரீகுரு சிவச்சந்திரரின் அய்யாவின் அருளிசை வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த விழாவில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.