செய்திக்குறிப்புகள்:
- நெல்லை திசையன்விளையில் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு அவர்கள் துவங்கி வைத்தார்.
- அதைத்தொடர்ந்து ரூபாய் 19 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள ஆக்சிஜன் பைப்லைன் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் ஸ்மார்ட் வகுப்பறைகள் பள்ளிக்கூடங்களில் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார் . உலக ரட்சகர் மேல்நிலைப்பள்ளி, திசையன்விளை ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி ,பெட்டைகுலம் மீராசாஹிப் மேல்நிலைப்பள்ளி என அத்தனை பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டது .
தலா 2 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்க விழா மற்றும் இலவசமாக மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா அனைத்தும் அந்தந்த பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .
ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு தலைமைதாங்கி தொடக்கி வைத்தார். இலவசமாக மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி உரையாற்றினார். ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் , மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ். ஆர் ஜெகதீஷ் , பேரூராட்சி கவுன்சிலர் கமலா சுயம்புராஜன் , அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன்போன்ற பலர் விழாவில் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து ரூபாய் 19 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள ஆக்சிஜன் பைப்லைன் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அடிக்கல் நாட்டி வைத்த சபாநாயகர் அப்பாவு அதன்பின் பேசியதாவது ;
மாநகர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு கிடைக்கக் கூடிய மருத்துவ வசதிகள் அனைத்தும் கடைக்கோடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கிடைக்கவேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்று பேசினார். அனைத்து விழாக்களும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Image source: dailydhanthi.com