செய்திக்குறிப்புகள்:
தமிழக அரசின் கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்ட கலைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வில்லிசை ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் தமிழக அரசால் வழங்கப்படும் கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செந்தில்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதன் படி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வயது சான்று, முகவரி சான்று மற்றும் கலை அனுபவ சான்றுகளின் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
உதவி இயக்குநர்,
மண்டல கலை பண்பாட்டு மையம்,
870/21, அரசுஅலுவலர் ‘ஆ’ குடியிருப்பு, (தொழிலாளர் வைப்புநிதிஅலுவலகம் அருகில்),
திருநெல்வேலி.
தொலைபேசி எண்: 0462-2901890.