விருதுநகர் சந்தையில் ரஷ்யா, உக்ரைன் போர் எதிரொலி காரணமாக பாமாயில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்றய நிலவரப்படி விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.2700 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.4208 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.440 உயர்ந்து ரூ. 2600 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 ஆகவும் விற்பனையான நிலையில் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகர் சந்தையில் விற்பனையான மற்ற பொருட்களின் விலை நிலவரம்:
உளுந்து 100 கிலோ மூடை ரூ.8100 -.9300 வரையிலும்,
உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ மூடை ரூ.10100 - 11100 வரையிலும்,
தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ மூடை ரூ.7300 -.9800 வரையிலும்.
பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.11500 - 11900 வரையிலும்,
பாசிப்பயறு 100 கிலோ மூடை ரூ.8000 - 8500 வரையிலும்,
துவரை 100 கிலோ மூடை ரூ.6400 - 7700 வரையிலும்,
துவரம் பருப்பு 100 கிலோ மூடை ரூ.10700 - 11600 வரையிலும்,
மல்லி லைன் ரகம் 40 கிலோ மூடை ரூ.5300 -.6200 வரையிலும்,
மல்லி நாடுரகம் 40 கிலோ மூடை ரூ.3400 - 3500 வரை வரையிலும்,
முண்டு வத்தல் மூடை ரூ.27000 - ௨௮௦௦௦ வரையிலும்,
ஏ.சி. வத்தல் மூடை ரூ.16000 - 18000 வரையிலும்,
புது வத்தல் மூடை ரூ.7000 -10500 வரையிலும்,
நிலக்கடலை பருப்பு 80 கிலோ மூடை ரூ.7000 ஆகவும்.
கடலை புண்ணாக்கு 100 கிலோ மூடை ரூ. 4900 ஆகவும்,
எள்ளு புண்ணாக்கு 50 கிலோ மூடை ரூ.2 ஆயிரம் ஆகவும்,
சீனி 100 கிலோ மூடை ரூ.3820 ஆகவும் விற்பனையானது குறிப்பிடத்தக்கதாகும்.