திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு அவர்கள் அதிக விலைக்கு உரம் விற்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உரம் விற்பனை செய்யும் அனைத்து கடைகளிலும் விவசாயிகள் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைத்திருக்க வேண்டும். உர விற்பனை நிலையங்களில் விற்பனை முனையக்கருவி மூலம் உரங்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் கடைகளில் சென்று உரங்கள் வாங்கும் பொழுது, மூடையில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு அதிகம் செலுத்தாமல் வாங்க வேண்டும் எனவும் விவசாயிகள் உரங்களை வாங்கியதற்கு உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.