நாம் வணங்கும் முதல் கடவுள் விநாயகர் பெருமான். எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் முதலில் விநாயகர் பெருமானை தான் நாம் வழிபடுகின்றோம் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களை தான் விநாயகர் சதுர்த்தி அன்றும் படைக்கின்றோம்.
விநாயகருக்கு உகந்த நாளான சங்கடகர சதுர்த்தி அன்று அருகம்புல் வைத்து வழிபடும் போது சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் விநாயகர் பெருமான் .அருகம்புல் ஆற்றலையும் பலனையும் தெரிந்து கொண்டு அருகம்புல்லை அனைவரும் மாலையாக விநாயகப் பெருமானுக்கு சாற்றுகின்றனர் .
பிள்ளையார் வழிபாடு என்பது மிகவும் எளிமையானது. அந்த வழிபாடு மிகவும் அற்புதமானது .
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி பல்விருக மாகிப் பறவையாய் பாம்பாகி...'
என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் முதல் உயிரினமாக அருகம்புல்லை தான் குறிப்பிடுகின்றார்.
அருகம்புல் தாவரம் எங்கும் இருக்கக்கூடிய உன்னதமான தாவரம். விநாயகரும் அனைத்து இடங்களிலும் இருப்பார் என்பதை நமக்கு உணர்த்துகின்றது.
விநாயகருக்கு பிடித்தமான பொருள் என்று பார்த்தால் அருகம்புல் முதல் பொருளாக விநாயகர் பெருமானுக்கு சாத்தப்படுகின்றது. பலவண்ண மலர்கள் விநாயகப் பெருமானுக்கு நாம் படைத்தாலும் மிகவும் குளிர்ச்சி பெற்ற அருகம்புல் சாற்றி வழிபடும்போது அதீக சக்தி பெற்று நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.
அனலாசுரன் என்னும் அரக்கன் பூலோகத்தை வதம் செய்த போது விநாயகர் பெருமான் கோபம் கொண்டு அனலாசுரனை விழுங்கி விடுகிறார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரனின் வெப்பத்தை தாங்க முடியாமல் விநாயகப் பெருமானே துன்பப்படும் போது சப்த ரிஷிகளும் அங்கு வருகின்றனர்.
ஒரு சாண் அளவுள்ள 21 அருகம்புல்லை விநாயகர் மீது சாத்துகின்றனர். விநாயக பெருமான் சூடு தணிந்து திருமேனி குளிர்ச்சி பெறுகின்றார். உலகமே அமைதி அடைகின்றது. அன்றிலிருந்து விநாயகர் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வணங்கினால் , குளிர்ச்சி நிறைந்த வாழ்க்கை தனை நான் அருள்வேன் என்று மக்களுக்கு விநாயக பெருமான் அருள் பாவிக்கின்றார்.
வாழ்க்கையில் விரைவில் திருமணம் நடப்பதற்கும், வாழ்க்கையில் மன குழப்பங்கள் தீர்ந்து மகிழ்ச்சி பிறப்பதற்கும், செல்வம் சேருவதற்கும், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும்… என வாழ்வினில் பிரச்சனைகள் பலவாக இருப்பினும் தொடர்ந்து ஐந்து வாரங்கள் சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள். 108 முறை ' ஓம் கம் கண் கணபதேய நமஹ' எனும் விநாயகர் மந்திரத்தை சொல்லி வழிபட்டு வாழ்க்கையில் என்றும் வளம் காணுங்கள்.