திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் திங்கட்கிழமை அன்று ஆவணி மூலத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவையொட்டி கருவூர் சித்தருக்கு மானூரில் நெல்லையப்பர் காட்சி அருளிய நெகிழ்வான சம்பவ விழா கோலாகலமாக பக்தர்களால் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.ஏராளமான பக்தர்கள் இந்த நாட்களில் கோவிலில் குவிந்த வண்ணம் வருகை புரிவார்கள் . இந்த வருடமும் நெல்லையப்பர் கோவிலில் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
திருவிழா 26-8-2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது . 29ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன் வீதி உலா,வெள்ளி மூஞ்சூறு வாகனத்தில் விநாயகப்பெருமானின் வீதி உலா மற்றும் மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் வீதி உலா என எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தந்தை சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார் .
3- 9 -2022 ஆம் தேதி திருநெல்வேலி நான்கு ரத வீதிகளிலும் கருவூர்சித்தர் வீதிஉலா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சங்கரன்கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை அடைந்து தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது . 4- 9 -2022 ஆம் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியாக கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி தந்து சாப விமோசன நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தெற்கு செழியநல்லூர் ,மானூர் ,ரஸ்தா ,தென்கலம் தாழையூத்து மற்றும் அந்த பகுதிகளில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் நெல்லையப்பர் கோவிலுக்கு வருகை புரிந்து நெல்லையப்பரை பக்தி பரவசத்தோடு தரிசனம் செய்தனர் .
Image source: dinamalar.com