செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரம் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி கோவிலில் சுமங்கலி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
- ஆயிரத்தெட்டு சுமங்கலிகள் கலந்துகொண்ட இந்த பூஜை ஸ்ரீ ஹரி கைலாஷ் அடியார்கள் மற்றும் பாரதி அமைப்பு சார்பில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரம் உள்ள அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோவிலில் 1008 சுமங்கலி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.ஸ்ரீ ஹரி கைலாஷ் அடியார்கள் மற்றும் சேவா பாரதி அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பூஜையில் தருமை ஆதீனம் தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞானசம்பந்தம் பிரான் சுவாமிகள் தலைமை ஏற்று குத்து விளக்கை ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சேவாபாரதி அமைப்பின் மாவட்ட சமூக நலன் பிரிவு நிர்வாகி உமா கார்த்திக் , பாப்பாகுடி ஒன்றிய செயலர் கல்யாணி மற்றும் கிராம சேவிகா மாரியம்மாள் ஆகியோர் பங்கேற்று பூஜையை ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள்.
மாவட்ட ஆயாம் சுப்ரமணியன், அம்பாசமுத்திரம் ஒன்றிய நிர்வாகிகள் ரவி, ராமசாமி, கண்ணன், சேவாபாரதி அமைப்பின் மாவட்ட செயலாளர் வீரராகவன், துணை தலைவர் கண்ணன் ,பொருளாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் இந்த பூஜையில் பங்கேற்றனர். ஆயிரத்தெட்டு சுமங்கலி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது