செய்திக்குறிப்புகள்:
- தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சேர்ந்து அடைமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீட்பு ஒத்திகை நடத்தினர்.
- இந்த பேரிடர் மீட்பு ஒத்திகையில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷப் தலைமை வகித்தார்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அடை மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில், விக்ரமசிங்கபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியில் வியாழக்கிழமை அன்று பேரிடர் ஒத்திகை நடைபெற்றது. தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சேர்ந்து மீட்பு ஒத்திகையை நடத்திக் காட்டினர்.
சூறைக்காற்று , வெள்ளம், மழை போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
அந்த நேரத்தில் எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ஒத்திகை செய்து காட்டினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷப் தலைமை வகித்தார்.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் ஆனந்த பிரகாஷ், விக்ரமசிங்கபுரம் நகர்மன்ற தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், காவல்துறை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் , தீயணைப்பு நிலைய அலுவலக ஆணையர் கண்மணி, தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், நகராட்சி பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.
Image source: dailydhanthi.com