செய்திக்குறிப்புகள்:
- நெல்லை தென்காசி மாவட்டத்தில் கீழக்கடையம் ரயில் நிலையத்தில் பாரதியின் வாழ்க்கை வரலாற்று ஓவியங்கள் வரைவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து ஓவியங்கள் வரையும் பணி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகின்றது.
திருநெல்வேலி தென்காசி மாவட்டம் கீழக்கடையம் ரயில் நிலையத்தில் பாரதியின் வாழ்க்கை வரலாற்று ஓவியங்கள் வரைவதற்கான அனுமதியை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து 11- 9- 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஓவியங்கள் வரையும் பணி தொடர்ந்து நடைபெற இருக்கின்றது.
மகாகவி பாரதியார் அவருடைய சுதந்திர தாகத்தையும் கவிதைகளையும் ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட உயர்ந்த கவிஞராக மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊராக கீழக்கடையம் விளங்குகிறது. இரண்டு ஆண்டுகள் தம்முடைய வாழ்நாட்களை பாரதியார் தன் மனைவியோடு இங்கு மகிழ்ச்சியோடு கழித்துள்ளார்.
இதனை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் கடையம் பகுதியில் அரசு நூலக வளாகம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வளாகத்திற்கு செல்லம்மா பாரதி கற்றல் மையம் என பெயர் சூட்டப்பட்டு, செல்லம்மாள் பாரதியின் முழு உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இளைய தலைமுறைகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் வகையில் , செல்லம்மாள் பாரதி வாழ்க்கை வரலாற்று ஓவியங்களை கடையம் ரயில்நிலையத்தில் வரைய வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்கான கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாக பிரிவு மூத்த மண்டல செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார். 11-9-2022 ஞாயிற்றுக்கிழமை பாரதியின் நினைவு நாள் ஆகிய அன்று ஓவியங்கள் வரையும் பணி தொடங்க விழா நடைபெறுகின்றது .
Image source: puthiyathalaimurai.com