செய்திக்குறிப்புகள்:
- நெல்லை சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக முக்கியமாக 18 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர்.
- விபத்துகளை தடுப்பதற்காக மொத்தம் 30 ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக முக்கியமாக 18 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர்.விபத்துகளை தடுப்பதற்காக மொத்தம் 30 ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க பலவிதமான சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மாவட்ட காவல் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
அதைத்தொடர்ந்து திருநெல்வேலி கன்னியாகுமரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அரியகுளம் அருகிலுள்ள சாரதா கல்லூரி விலக்கு தாழையூத்து அ௫கே படை சாமி ராசா கோவில் மற்றும் மூன்றடைப்பு சந்திப்பு ஆகிய பகுதிகளில் 18 இடங்களில் அடிக்கடி விபத்து நடப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால் காவல்துறையினர் அதிகப்படியான நடவடிக்கை எடுத்துள்ளனர். விபத்துக்கள் நடக்கும் இந்த இடங்களில் விபத்துக்களை தடுப்பதற்காக மொத்தம் 30 இடங்களில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Image source: dailydhanthi.com