செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் அங்கன்வாடி பணியாளர்கள் பங்குபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் அங்கன்வாடி பணியாளர்கள் பங்குபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது . குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்தப் பேரணி விழா நடந்தது .
சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடங்கிய விழிப்புணர்வு பேரணி குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக நடத்தப்பட்டது . சார் ஆட்சியர் ரிஷாப் இந்தப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முக்கிய வீதிகளில் பேரணியாக சென்ற அங்கன் வாடி பணியாளர்கள் சேரன்மகாதேவி போக்குவரத்து வளைவில் தம்முடைய விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜாஸ்மின் , குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் ஜெஸ்ஸி, காந்திமதி , சரஸ்வதி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.