செய்திக்குறிப்புகள்:
- நெல்லை பாளையங்கோட்டையில் பதினொன்றாம் தேதி தமிழ் சங்கங்களின் தமிழ் கூடல் நிகழ்ச்சி விழா நடைபெற இருக்கிறது.
- மகாகவியின் நூற்றாண்டு நினைவுநாளை நினைவு படுத்தும் வகையில் இந்த விழா நடைபெறப் போவதாக பொதிகை தமிழ் சங்க தலைவர் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமிழ்ச் சங்கங்களின் தமிழ் கூடல் நிகழ்ச்சி விழா நடைபெற இருக்கிறது. மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளை நினைவு படுத்தும் வகையில் பொதிகை தமிழ்ச் சங்கம் இந்த விழாவை நடத்துவதாக பொதிகை தமிழ்ச் சங்க தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;
பொதிகை தமிழ் சங்கம் பலவிதமான தமிழ் மொழியை மேம்படுத்தும் வகையில் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது .மகாகவி பாரதியாரின் படைப்புகள் மற்றும் அவரது புகழ் உலகமெங்கும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் பன்னாட்டு கருத்தரங்கம்,கவியரங்கம் போட்டிகள் என பல நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில், மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு , தமிழ் கூடல் விழா எனும் நிகழ்ச்சியை இப்பொழுது நடத்த இருக்கிறது.
11-9-20 22ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த விழா நடைபெறுகிறது. பாளையங்கோட்டை வா.உ.சி மைதானத்தில் பின்புறம் உள்ள அய்யம்பெருமாள் அரங்கத்தில் இந்த விழா அனைத்திலும் இருந்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு அவர்கள் இந்த விழாவினை தலைமை தாங்கி விருதுகள் வழங்க இருக்கிறார்.
சிறந்த 10 அமைப்புகளுக்கு 'தமிழன்னை 2022' என்ற விருது வழங்கப்பட இருக்கிறது . அனைத்து விதமான போட்டிகளும் நடைபெற உள்ளது . வெற்றி பெறும் 10 பேருக்கு தமிழக தமிழ் கவிச்சுடர் என்ற விருது வழங்கப்படுகிறது. கல்லூரிகளில் சிறந்த விதத்தில் செயல்படும் 2 தமிழ் மன்றங்களுக்கு ' தமிழ் பணிசுடர் 'என்ற விருதும் வழங்க இருக்கிறோம். பொதுமக்கள் , தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம் என்று பொதிகை தமிழ் சங்க தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.