செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி வெள்ளிக்கிழமை 7 வட்டங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடைபெற இருக்கிறது.
- அனைத்து தேவைகள் தொடர்பாகவும் இந்த முகாமில் மக்கள் வந்து மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வெள்ளிக்கிழமை 9 -9- 2022 வெள்ளிக்கிழமையன்று அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடைபெற இருக்கிறது . அது பற்றிய செய்திக் குறிப்பில் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு அவர்கள் தெரிவித்ததாவது;
திருநெல்வேலி வட்டம், பாளையங்கோட்டை வட்டம்,ஜே ஜே நகர் சமுதாய நலக்கூடம், தடியம்பட்டி கிராமத்திற்கு அதன் ஊராட்சி அலுவலகம், ரெட்டியார்பட்டி கீழநத்தம் கிராமத்திற்கு அதன் சமுதாய நலக்கூடம் ,மூளை கிராமத்திற்கு பொன் நகர் சமுதாய நலக்கூடம், அம்பாசமுத்திரம் வட்டம் , கிராமத்திற்கு ஏமன்குளம் சமுதாய நல கூடம் ,நாங்குநேரி வட்டம், திசையன்விளை வட்டம், தழைச்சுற்று கரை நாவலடி கிராமத்திற்கு அதன் ஊராட்சி அலுவலகம் ஆகிய அனைத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
இலவச வீட்டு மனைப்பட்டா, ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, வாக்காளர் அடையாள அட்டை, சமூக பாதுகாப்பு திட்டங்கள், நிலமகள் சாலை வசதி, போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி அனைத்து அடிப்படைத் தேவைகள் தொடர்பாகவும் இந்த முகாமில் மக்கள் வந்து மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Image source: dailydhanthi.com