திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி சாலையில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆற்றுப் பாலத்தடி இசக்கியம்மன் கோவில் கொடை திருவிழா ஏராளமான பக்தர்கள் சூழ மிகவும் சிறப்பாய் நடைபெற்றது . இந்த கொடை விழா தொடக்கமாக கால் நடும் நிகழ்ச்சி கடந்த 30ஆம் தேதி அன்று தொடங்கியது.
தொடர்ந்து 4- 9- 2022 அன்று மாகாப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகளும் திங்கட்கிழமை புஷ்ப அலங்காரம் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மறுநாள் செவ்வாய்க்கிழமை அம்பாசமுத்திரத்தில் புதுகிராமம் தெரு விநாயகர் கோவிலில் இருந்து வேண்டிக்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அதைத்தொடர்ந்து நவகிரக லட்சுமி ஹோமம் மற்றும் கும்பாபிஷேகம் பாலாபிஷேகம் அங்கு அலங்கார சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடைபெற்றது . அதைத் தொடர்ந்து அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது . அன்று மாலை மாவிளக்கு சிறப்பு வழிபாடு, ராகுகால விளக்கு பூஜை சந்தன காப்பு அலங்காரம் , தீபாராதனை அனைத்தும் நடைபெற்றன சாமக்கொடை நிகழ்வானது இரவு 12 மணிக்கு மேல் நடைபெற்று பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது . அடுத்ததாக வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் கிழக்குப்பகுதி சேனைத்தலைவர் சமுதாய நிர்வாகத்தினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் இளைஞர்கள் சேர்ந்து இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
Image source: dailydhanthi.com