செய்திக்குறிப்புகள்:
- நெல்லை 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 232 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி தமிழ் பண்பாடு மையம் சிறப்பு விழா ஏற்பாடு செய்துள்ளது.
- தாமிரபரணி ஆற்றின் கல் மண்டபத்தில் நெல்லையின் பழமையை பெருமைகளை எடுத்துரைக்கும் கருத்தரங்கு மற்றும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நெல்லை 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் என பெயரிடப்பட்ட 232 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி தமிழ் பண்பாடு மையம் சிறப்பு விழா ஏற்பாடு செய்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கல் மண்டபத்தில் நெல்லையின் பழமையை பெருமைகளை எடுத்துரைக்கும் கருத்தரங்கு மற்றும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .
நெல்லை மாவட்டம் பழமையான தமிழ் கலாச்சாரமும் பெருமைகளையும் கொண்ட ஒரு மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. வெள்ளையர் ஆட்சி நடைபெற்ற காலத்தில் தென்பாண்டிய நாடு, திருநெல்வேலி சீமை என்று அழைக்கப்பட்டது .
1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் என்று பெயரிடப்பட்டு புதிய பொலிவுடன் இன்று வரை காட்சி தருகிறது. செப்டம்பர் மாதம் முதல் நாளை நினைவு கூறும் வகையில் நெல்லை தினமாக கொண்டாடுவதற்கு தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் முடிவு எடுத்து இம்மாதம் முழுவதும் அதற்கான பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குறுக்குத்துறை பகுதியில் உள்ள கல் மண்டபத்தில் நேற்று முதல் நாள் பல சிறப்பான நிகழ்ச்சிகள் கோலாகலமாய் நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சிக்கு நாட்டுப்புற நடனங்கள் , நெல்லையின் பழமை நாட்டு ஓவியம் தீட்டல், குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி, நெல்லையின் பழமை பெருமைகளை எடுத்துரைக்கும் கருத்தரங்கு என மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆரோக்கியம், புருஷோத்தமன், வேல சங்கர் ராம் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர மேயர் சரவணன் முன்னிலை வகித்தார்.
தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத் துணைத் தலைவர் ரமேஷ் ராஜா, தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையப் பொருளாளர் ராமச்சந்திரன், வரலாற்று ஆய்வாளர்கள் செ. திவான் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
Image source: dailydhanthi.com