திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுந்தர பரிபூர்ண பெருமாள் கோவிலில் ஆவணித்தேரோட்ட திருவிழா நடைபெற்றது .ஒவ்வொரு வருடமும் வள்ளியூர் சுந்தர பரிபூர்ண பெருமாள் கோவிலில் ஆவணி தேரோட்ட விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடமும் 29- 8- 2022 ஆம் தேதி கொடியேற்றத்துடன் மிகவும் கோலாகலமாக தொடங்கியது.
11 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் சுந்தர பரிபூர்ண பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். புதன்கிழமை பத்தாம் நாள் தேரோட்ட நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது .காலையில் எழுந்தருளிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்தார்.
தீபாராதனை நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். அதைத்தொடர்ந்து தேரை வடம்பிடித்து நேர்த்திக்கடன் பக்தர்கள் இழுத்தனர். கோவிலை சுற்றியுள்ள ரதவீதிகளில் சுவாமி தேரில் உலா வரும் அழகிய நிகழ்ச்சியை பக்தி பரவசத்தோடு மக்கள் தரிசனம் செய்தனர். வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் கோவில் நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
Image source: dailydhanthi.com