முன்னோர்களை நினைத்து வணங்கி வழிபடக்கூடிய நாள்தான் அமாவாசை. இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய பூஜைகளை முறைப்படி நாம் செய்து வருவது என்பது நம்முடைய தலைமுறை நலமாக இருக்கும் என்பதை முழுமையாக நம்பி செய்யக்கூடிய படையல் ஆகும். பித்ரு பூஜை செய்தால் தான் நம்முடைய தலைமுறை தழைத்தோங்கி வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மாதந்தோறும் அமாவாசை தினத்தில் நம்முடைய முன்னோர்களை நினைத்து படைக்கின்றோம். ஒவ்வொரு அமாவாசையும் முன்னோர்களை நினைத்து வணங்கி வழிபட்டு அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெறுகிறோம் .
சூரியனைப் பிதிர் காரகன் என்றும் சந்திரனை மாதுர் காரகன் என்றும் சொல்கிறார்கள். சூரியனும் சந்திரனும் இணையும் அந்த நாளை தான் அமாவாசை என்கிறோம்.
அமாவாசை அன்று நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் பற்றி பார்ப்போம்..
அமாவாசைதினத்தன்று அகத்திக்கீரை பசுவிற்கு கொடுக்க வேண்டும் . அவ்வாறு கொடுக்கும் போது தோஷம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். அமாவாசை தினத்திலே ஆத்மாக்களை நினைத்து வணங்கினால் நம்மிடம் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் படிப்படியாக விலகிவிடும்.
அமாவாசை தினத்திலே இறந்த பெற்றோர்களை நினைத்து படைத்து , காகத்திற்கு உணவு வைத்தால் பிதுர்களின் மனம் சாந்தி பெற்று சந்ததிகள் வாழ்வு சிறப்பு பெறும் .
அமாவாசை தினத்திலே மஞ்சள் -காவி -சந்தன பொன்னிறம் -போன்ற உடைகளை அணிந்தோம் என்றால் சாத்வீகமான உணர்வு நமக்கு ஏற்படும். நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன என்பது நமக்கு தெரிய வரும். தவறுகள் செய்யாத ஒரு வாழ்க்கையாக நாம் வாழ்வதற்கான தத்துவம் புரிவதற்கான அருமையான தருணமே அமாவாசை எனும் புண்ணிய தினம்.
நம் ஆத்மாக்களை அன்போடு நினைக்கையில் அவர்கள் நம்மை வந்து வாழ்த்துவார்கள் என்பதை உணர்ந்து அமாவாசை அன்று முன்னோர்களின் நினைத்து வழிபட்டு வாழ்க்கையில் அனைத்து நலன்களும் காண்போம்.
Image source: pillaicenter.com