செய்திக்குறிப்புகள்:
- நெல்லை அரியநாயகிபுரம் குடிநீர் திட்டத்தின் மூலம் ஒரு மாதத்தில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் கே. என். நேரு தகவல்.
- நெல்லையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவில் நிறைவேற்ற , அதற்கான டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நெல்லை மாநகராட்சியில் ஒரு மாதத்தில் அரியநாயகிபுரம் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார் .
குடிநீர் வழங்கல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பாக தென்காசியில் தூத்துக்குடி , நெல்லை மாவட்டங்களில் உள்ள நகராட்சி மாநகராட்சி , பேரூராட்சிகளின் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சபாநாயகர் அப்பாவும் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், கீதாஜீவன்,துரைமுருகன் ஆகியோர் பேசினார்கள்.
நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு குடிநீர் வழங்கல் துறை மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நிகழ்த்தினார் .
அப்பொழுது அவர் தெரிவித்ததாவது;
பாப்பாங்குடி யூனியனில் 17 கிராமங்கள் ஆலங்குளம் யூனியனில் 31 கிராமங்கள் மற்றும் முக்கூடல் பேரூராட்சி பகுதிகளுக்கு ஐம்பதரை கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. ரூபாய் 46 கோடியே 55 லட்சத்தில் பாப்பாக்குடி கீழப்பாவூர் பேரூராட்சி, கடையம் பகுதிகளை சேர்ந்த 173 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 94 சதவீதம் நிறைவடைந்துவிட்டது.
மேலும் மானூர் பாளையங்கோட்டை யூனியன்களில் 170 கிராமங்களுக்கு 32.40 கோடியிலும், ஆலங்குளம் சங்கரன்கோவில் யூனியன்களில் 147 கிராமங்களுக்கு ரூபாய் 31 . 32 கோடியிலும், பாளையங்கோட்டை யூனியன் ரெட்டியார்பட்டி மற்றும் 63 கிராமங்களுக்கு ரூ 28 கோடி 21 லட்சம் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவில் நிறைவேற்ற அதற்கான டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா , பேரூராட்சி ஆணையர் டாக்டர் செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா , குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்
Image source: dailydhanthi.com