செய்திக்குறிப்புகள்:
- நெல்லை வடக்கு பச்சையாறு அணையில் இருந்து 46 குளங்களுக்கு தனிக் கால்வாய் அமைத்து தர சௌமியா எட்வின் கோரிக்கை.
- 46 குளங்களுக்கும் தண்ணீர் போக்குவரத்து அதிகமானால் சுமார் 75 ஆயிரம் விவசாயி குடும்பங்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் அறிவிப்பு.
திருநெல்வேலி மாவட்டம் நெல்லை வடக்கு பச்சையாறு அணையில் இருந்து 46 குளங்களுக்கு தனிக் கால்வாய் அமைத்து தர அமைச்சர் துரை முருகனிடம் நான்குநேரி யூனியன் தலைவர் சௌமியா எட்வின் கோரிக்கை மனு அளித்தார்
திருநெல்வேலி இட்டமொழி நெல்லை மாவட்டத்திற்கு ஆய்வுப் பணிகளுக்காக தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் வந்திருந்தார் . அப்பொழுது நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் சௌமியா எட்வின் சார்பில் அவரது கணவர் நாங்குநேரி ஒன்றிய கவுன்சிலரும் திமுக ஒன்றிய செயலாளருமான எஸ். ஆரோக்ய எட்வின் துரைமுருகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது;
நாங்குநேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து 46 குளங்களுக்கு தனி கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எவ்வளவு அதிகமாக மழை பெய்தாலும் தண்ணீர குறைவின்றி இருந்தாலும் அந்த குளங்களுக்கு தனி கால்வாய் இல்லாததால், வருடம் முழுவதும் வறண்டு போய் விடுகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரம் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 46 குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகமானால் சுமார் 75 ஆயிரம் விவசாயிகள் குடும்பங்கள் மகிழ்ச்சி அடைவார்கள் . அவர்களுடைய வாழ்வாதாரம் உயர்வதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும் . நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பேற்ற நாள் முதலாக நான் அரசின் சார்பாக 46 குளங்களுக்கு தண்ணீர் வசதி ஆய்வு பணிகளை சிறப்பாக செய்து வருகின்றேன்.
ஆதலால் விவசாயிகளின் நலனுக்காக 46 குளங்களுக்கு தனி கால்வாய் அமைக்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் .
விரைவில் ஆய்வு செய்து திட்டத்தை செயல்படுத்துவதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார் .
Image source: dailydhanthi.com