நவகிரகத்தில் புதன் பகவான் வாழ்க்கையில் அனைத்து விதமான சகல நன்மைகளையும் கொடுக்கக்கூடிய சுபக்கிரகம் என்பதால் புதன் பகவானை புதன்கிழமை அன்று அனைவரும் வழிபட வேண்டும்.
நம்முடைய நரம்பு மண்டலங்கள் சீர்பெற்று நல்ல அறிவாற்றல் கிடைப்பது என்பது புதன் பகவானுக்கு உரிய சிறப்பு .
ஒரு ஜாதகத்தில் புதன் காரகன் பலம் குன்றி இருப்பின் நரம்புமண்டலம் பாதிப்பாக இருக்கும்
குழந்தைகளின் அறிவு சுவாதீனம் மந்தமாக இருக்கும் .சுறுசுறுப்பாக இல்லாது சோம்பல் அதிகமாக இருக்கும். படிப்புத்திறன் இன்றி ஞாபகமறதி கூடுதலாக இருக்கும். கைகால் வலிப்பு போன்ற இன்னல்களும் தோன்றும்
புதன் பகவானின் அருள் நம்முடைய குழந்தைகளுக்கு கிடைத்துவிட்டால் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவது ,படிப்பில் ஆர்வம் இல்லாது இருப்பது ,மைக்ரேன் தலைவலி என்று சொல்லக்கூடிய உடல் கோளாறுகள் கைகால்கள் முடக்கம் -வலிப்பு என அனைத்தும் விலகி நல்ல அறிவாற்றலோடு வளர்வார்கள் .
புதன் பகவானுக்கு உரிய தேவதை பெருமாள்-என்பதால் பெருமாளுக்கு உகந்த துளசி தீர்த்த வழிபாடு, புதன் பகவானின் அருளை பெற்று நம் குழந்தைகளின் அறிவாற்றல் பெறுவதற்கான நல்ல பலனைக் கொடுக்கும்.
புதன்கிழமை முதல் நாள் செவ்வாய்க்கிழமை இரவு 10 துளசி இலைகள் 50 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு வையுங்கள்.. மறுநாள் காலை புதன்கிழமை புதன் ஓரை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பூஜை அறையில் இரண்டு நெய் அகல் தீபம் ஏற்றி வைக்கவும்.
அந்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து புதன் பகவானுக்குரிய காயத்ரி மந்திரம் 27 முறை உச்சரிக்க வேண்டும்.
"கஜ த்வஜாய வித்மஹே- சுக ஹஸ்தாய தீமஹி -தன்னோ புத பிரசோதயாத்"
என 27 முறை உச்சரித்து பிறகு அந்த தீர்த்தத்தை உங்களுடைய பிள்ளைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளின் அறிவாற்றலோடு படிப்பில் முழு கவனம் வைத்து படிப்பார்கள்.
பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றியும் இந்த வழிபாட்டை செய்யலாம்.புதன்கிழமை- புதன் ஓரை- புதன் பகவானுக்கு வழிபாடு என்பது மிகச்சிறந்த அற்புதமான வழிபாடு.
தொடர்ந்து 9 புதன்கிழமை துளசி தீர்த்தத்தை விளக்கேற்றி படைத்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து புதன் பகவானின் அருள் பெற்று சிறப்போடு வாழ்க்கையில் நிறைவு காணுங்கள்.
Image source: dinakaran.com